சிம்புவின் போடா போடி!

புதன், 28 மே 2008 (13:15 IST)
webdunia photoWD
மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்றார் மாவோ. நூறுதம் உண்மை. சிம்பு ஒதுங்கிப் போனாலும் உரசுகிற மாதிரிதான் இருக்கின்றன அவரைத் தேடி வரும் வாய்ப்புகள்.

சிலம்பாட்டம் படத்தில் சினேகாவுடன் நடிப்பவர் அடுத்து ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். விக்கி என்பவர் இயக்கம். படத்தின் பெயர் போடா போடி!

இந்த மரியாதைக்குரிய பெயரை சேம்பர் அனுமதிக்குமா என்பதெல்லாம் வேறு விஷயம். சிம்பு என்றதும் இப்படி சில்மிஷமாக பெயர் வைக்கிறார்களா? சில்மிஷ பெயர்களுக்கு சிம்பு சிபாரிசு செய்கிறாரா?

இதே ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிக்கும் மற்றொரு படத்தின் பெயர் நினைத்தாலே இனிக்கும்!

அப்படியானால் தப்பு எங்கே இருக்கிறது? சிம்பு யோசிக்க வேண்டிய நேரம் இது.

வெப்துனியாவைப் படிக்கவும்