காமெடி படத்தில் நடிப்பதால் மதுமிதாவை எளிதாக நினைத்தால் ஏமாந்தீர்கள். கேரியர் விஷயத்தில் ஆள் கெட்டி.
பிரைவெட்டாக ஃபோட்டோசெஷன் ஒன்றை நடத்தியிருக்கிறார் மதுமிதா. ஆல்பம் போட்டு கோடம்பாக்க தயாரிப்பாளர்களுக்கு காட்ட அல்ல, மும்பை தயாரிப்பாளர்களை மடக்கிப் போட!
ஆம், விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிக்கிறார் மதுமிதா. அப்படியே பிக்கப்பாகி பாலிவுட்டிலேயே செட்டிலாகத்தான் இந்த ஃபோட்டோசெஷனெல்லாம்.
கரீனா கபூர்களுக்கும், பிபாசு பாசுகளுக்கும் மத்தியில் மதுமிதா எடுபடுவாரா?
இந்த சந்தேகம் மதுமிதாவிடம் இல்லை என்பதால், வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம்!