வண‌க்க‌ம்மா- சவாலு‌ம் சரணாக‌தியு‌ம்!

திங்கள், 26 மே 2008 (19:59 IST)
வே‌லி‌யி‌ல் போறதை வ‌ம்பாக ஏதோ செ‌ய்வதாக பழமொ‌ழி சொ‌ல்வா‌ர்க‌‌ளே ‌கிராம‌த்‌தி‌ல். அத‌ற்கு உதாரணமா‌யிரு‌‌‌க்‌கிறது வண‌க்க‌ம்மா டீ‌ம்.

ராம‌ர், அனும‌ன் வேஷ‌ம் போ‌ட்ட சரவணனு‌ம், ‌வி‌ஷ்ணு ‌ப்‌ரிய‌னு‌ம் சாலையோர‌ம் மூ‌த்‌திர‌ம் பெ‌ய்வது போல வண‌க்க‌ம்மா பட‌த்‌தி‌ன் அழை‌ப்‌பித‌ழி‌ல் புகை‌ப்பட‌ம் வெ‌ளி‌யி‌ட்டது‌ம், இ‌ந்து‌த்துவா அமை‌ப்புக‌ள் இத‌ற்கு எ‌திராக‌க் கோஷ‌ம் போ‌ட்டு‌த் துவ‌க்க ‌விழாவை முட‌க்‌கியது‌ம் தெ‌ரியு‌ம்.

யா‌ர் எ‌‌தி‌ர்‌த்தாலு‌ம் ச‌ர்‌ச்சை‌க்கு‌ரிய கா‌ட்‌சியை‌ப் படமா‌க்‌கியே த‌ீருவோ‌ம் எ‌ன்று சவா‌ல் ‌வி‌ட்டா‌ர் வண‌க்க‌ம்மா‌வி‌ன் தயா‌ரி‌ப்பாள‌ர். கடவு‌ள் ‌மீது கை வை‌த்து தசாவதார‌ம் த‌ள்ளாடி‌க் கொ‌ண்டிரு‌ப்பதை‌ப் பா‌ர்‌த்து உஷாரானா‌ர்களா தெ‌ரிய‌வி‌ல்லை. சவாலை வாப‌ஸ் வா‌ங்‌கி‌ச் சரணாக‌தி ஆ‌கி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

சரவண‌ன், ‌வி‌ஷ்ணு‌ப்‌ரிய‌ன் ஆ‌கிய இருவ‌ரி‌ன் வேஷ‌த்தையு‌ம் கலை‌த்து பூ‌ம் பூ‌ம் மா‌ட்டு‌க்கார‌ர்க‌ள் போல‌ப் பு‌திய வேஷ‌ம் கொடு‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌ந்த ஒ‌ன் பா‌த்ரூ‌ம் கா‌ட்‌சியு‌ம் க‌ட்...!

ஒணா‌ன் பழமொ‌ழி‌க்கு இதை‌விட உதாரண‌ம் வே‌ண்டுமா!

வெப்துனியாவைப் படிக்கவும்