சனி, 24 மே 2008 (18:20 IST)
ஆஸ்கர் ஃபிலிம்சின் லீலை பட விளம்பரம் பார்த்தவர்களுக்கு ஆச்சரியத்தில் புருவம் உயர்ந்திருக்கிறது. லீலையில் மாதவன், சதா நடித்துக் கொண்டிருக்க, விளம்பரத்தில் இறுக்கமாகக் கட்டியணைத்தபடி வேறு ஜோடி. எப்படி இது?
மாதவன் படத்தை கே.வெங்கட் இயக்குகிறார். விளம்பரத்தில் இருந்தது ஆண்டர்சன் இயக்கும் லீலை. ஒரே பெயரில் இரண்டு படங்கள்.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் லீலை பெயரை முறைப்படி சேம்பரில் பதிவு செய்துள்ளதால் சட்டப்படி லீலை டைட்டில் அவர்களுக்கு உரியது. மாதவன் படத்திற்கு வேறு பெயர் தேட வேண்டும்.
ஆண்டர்சனின் லீலையில் நடிப்பது புது முகங்களான ஷிவ், மான்ஸி. இருவருமே மாடல்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் சதீஷ் சக்கரவர்த்தி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.