அந்தோணி-யார் படத்தில் ஷாமுடன் நடித்து வருகிறார் மல்லிகா கபூர். எஸ்.ஏ. சந்திரசேகரனின் பந்தயம் படத்தில் இவரே ஹீரோயின் என சொல்லப்பட்டது. ஹீரோ நித்தின் சத்யா.
பந்தயத்திற்காக கலர்ஃபுல் காஸ்ட்யூமில் போட்டோசெஷன் எல்லாம் நடந்தது. மல்லிகா கபூரும் கலந்துகொண்டார். என்ன நடந்ததோ, பந்தயத்திலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார் மல்லிகா.
இப்போது அவருக்கு பதில் சிந்து துலானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுள்ளான், மன்மதன் என டாப் கியரில் எகிறி, மஜாவில் ஒத்தப் பாடல் என்று நியூட்ரலுக்கு வந்தவர் சிந்து துலானி. பந்தயம் அவருக்கு பிக்கப் கொடுக்குமா?
விஜய் ஆண்டனி இசையமைக்க தனது சொந்தப்ட நிறுவனமான வி.வி. கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை தயாரிக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகரன்.