நம்பவே முடியவில்லை. நாற்பது கிலோ குறைத்திருக்கிறாராம் நகுல். பாய்ஸில் டிரம் சைஸில் இருந்தவர் இப்போது இளைத்த மூங்கில் அளவில்.
இந்த அசாதாரண எடை குறைப்பு காதலில் விழுந்தேன் படத்துக்காக. பாய்ஸில் நடித்த அனைவரும் (மணிகண்டன் தவிர்த்து) நல்ல நிலையில் இருக்க நகுலுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கவில்லை. அந்தக் குறையும் இந்தப் படத்தோடு முடிந்துவிடும்.
காதலில் விழுந்தேன் படத்தின் மொத்த உரிமையையும் பிரபல தமிழ் சானல் ஒன்று வாங்கியுள்ளதாம். விரைவில் தமிழ்நாடு முழுக்க அந்த சானலே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம். படம் நன்றாக வந்திருப்பதே இந்த விற்பனைக்கு காரணம். சந்தோஷத்தில் நகுல் முன்புபோல் பெருத்துவிடாமலிருக்க வேண்டும்.