ரீமா சென்னின் சொகுசு கார்!

வியாழன், 22 மே 2008 (20:09 IST)
படம் இல்லாவிட்டாலும் படகு காரில் சென்றால்தான் நட்சத்திரங்களுக்கு மதிப்பு. காரை வைத்தே நடிகர்களின் மார்க்கெட்டை ஓரளவு கணித்துவிடலாம்.

தமிழ் சினிமா பிரபலங்களில் பி.எம்.டபிள்யூ. கார் வைத்திருப்பவர்கள் சொற்பம். விரல்விட்டு எண்ணிவிடலாம். விஜய், த்ரிஷா என்று நான்கைந்து பேரே தேறுவார்கள்.

ஆயிரத்தில் ஒருவனில் நடித்துவரும் ரீமாசென், புதிய மாடல் பி.எம்.டபிள்யூ. காரை மு‌ம்பையிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார். இந்தக் கார் ரீமாவின் நீண்டநாள் கனவாம்.

ஆயிரத்தில் ஒருவன் தவிர தமிழில் படமே இல்லாத ரீமாவுக்கு இந்தக் கார் எதற்கு என்று புரணி பேசுகிறார்கள் சொகுசு கார் இல்லாத பிற நடிகைகள்.

இதற்காகக் கூட கார் வாங்கியிருக்கலாம் ரீமா சென்!

வெப்துனியாவைப் படிக்கவும்