சனி, 17 மே 2008 (20:22 IST)
சிவா மனசுல சக்தி படத்தைத் தயாரிப்பதன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த விகடன் டாக்கீசின் அடுத்த தயாரிப்பு, வால்மீகி.
புதிதாகப் படம் தயாரிப்பவர்கள் முதல்படம் முடிந்த பிறகே இரண்டாவது அடியை எடுத்து வைப்பார்கள். விகடனுக்கு அந்தத் தயக்கமெல்லாம் இல்லை.
ஷங்கரிடம் அசிஸ்டெண்டாகப் பணிபுரிந்த அனந்த நாராயணன் சொன்ன கதை பிடித்திருந்ததால், முதல் படம் முடியும் முன்பே இரண்டாவது தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.
கல்லூரியில் அறிமுகமான அகில், வால்மீகிளின் கதாநாயகன். மலையாளப் பட உலகில் சின்னப் புயலாக நுழைந்திருக்கும் மீரா நந்தன் நாயகி. இவருடன் சேர்த்துத் தமிழிற்கு வந்த மலையாள நடிகைகளின் எண்ணிக்கை செஞ்சுரியைத் தொடும்.
விரைவில் படப்பிடிப்பிற்குக் கிளம்புகிறது வால்மீகி டீம்.