பரபரப்பாக கூடிய இயக்குனர்கள் சங்க செயற்குழு ஆறுதலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடிதடியில் நின்றுபோன சங்கத் தேர்தலை ஜூலை இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் நடத்த செயற்குழு முடிவு செய்துள்ளது. அதற்குமுன் ஜூன் 8 சங்கத்தின் பொதுக்குப கூடுகிறது. சங்க தேர்தல் தேதி குறித்து அன்று இறுதி முடிவு எடுக்கப்படும்.
செயற்குழு கூடியதுமே, நடந்த களேபரத்துகூகு விளக்கம் கேட்டு பலரும் ஹைடெசிபலில் கத்த ஆரம்பித்தனர். நடந்தவைகளை மறந்திடுங்கள் என அவர்களை சமாதானப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வந்தனர் நிர்வாகிகள்.
இன்றைய நிலைமைக்கு அடிதடி இல்லாமல் செயற்குழு கூட்டம் நந்ததே ஒரு சாதனைதான்!