பயிற்சி எடுக்கும் ஜெயம் ரவி!

வெள்ளி, 16 மே 2008 (14:15 IST)
சந்தோஷ் சுப்ரமணியம் சக்கை போடு போடுகிறது. அந்த உற்சாகத்துடன் பேராண்மையில் உழைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

நினைத்தது கிடைக்க நடிகர்களை சக்கையாய் பிழிய யோசிக்காதவர் இயக்குனர் ஜனநாதன்.

பேராண்மையில் வனத்துறை அதிகாரி வேடம் ஜெயம் ரவிக்கு. கதைப்படி அம்பு எய்யும் காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. கேமரா ட்ரிக் ஷாட்டை வைத்து ஒப்பேற்றிவிடலாம்தான்.

ஆனால், ஜெயம் ரவி சின்சியராக அம்பு எய்வது எப்படி என பயிற்சி எடுத்திருக்கிறார். சென்னையில் மட்டுமே இதற்கான இதற்கான பயிற்சி வகுப்புகள் இருக்கின்றனவாம்.

படம் முடிந்த பிறகு சீன ஒலிம்பிக்கிற்கு ஜெயம் ரவியை அனுப்பலாம். அம்பு எய்யும் போட்டியில் அட்லீஸ்ட் வெண்கல மெடலாவது வாங்கி வருவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்