'மொழி', 'வெள்ளித்திரை' படங்கள் அவரை மென்மையான ஹீரோவாக அடையாளப் படுத்தியிருக்கிறது. பொதுவாக நடிகர்கள் ஹீரோ இமேஜிலிருந்து மீண்டும் வில்லனாக மாறி இமேஜை டேமேஜ் செய்ய விரும்பமாட்டார்கள். ஆனால், பிருத்விராஜ் விரும்பியிருக்கிறார். காரணம், மணிரத்னம்!
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் மணிரத்னத்தின் புதிய படத்தில் விக்ரமும் நடிக்கிறார். அதாவது தமிழ் பதிப்பில். இந்த தமிழ்ப் பதிப்பில் வில்லனாக நடிக்க மணிரத்னம் தேர்வு செய்தது பிருத்விராஜை என்கிறார்கள்.
மணிரத்னம் படத்தில் எந்த ரோல் கிடைத்தாலும் நடிக்கத் தயாராக இருக்கிறார்கள் அனைத்து நடிகர்களும். பிருத்விராஜும் அதில் அடக்கம்.
வில்லனோ, குணச்சித்திர ரோலோ, எதுவானாலும் இயக்குனர் மணிரத்னம் என்றால் ஓ.கே.தான் என்று ஒப்புக் கொண்டுள்ளாராம்.