கரணின் கந்தா!

புதன், 14 மே 2008 (19:18 IST)
கரணின் காத்தவராயன் ஏறக்குறைய முடிந்துவிட்டது. வடிவேலுவுக்காகத்தான் லேட்டாம். கந்து வட்டிக்காரராக படம் முழுக்க வந்து பண்ணுகிறாராம் வைகைப் புயல்.

காத்தவராயனுக்குப் பிறகு காளியில் நடிக்கிறார் கரண். அதன்பிறகு சரணின் அசிஸ்டெண்ட் பாபு சந்திரன் இயக்கும் படம்.

திருவாரூர் பாபு என்ற பெயரில் பத்திரிக்கைகளில் சிறுகதை, நாவல் எழுதிவந்தவர்தான் பாபு சந்திரன். ஒரு ஃப்ரெஷ்னெஸ்க்காக தனது இயற்பெயர் பாபு சந்திரனை சினிமாவில் பயன்படுத்துகிறார்.

படத்துக்கு கந்தா என்று பெயர் வைத்துள்ளனர் (கரணுக்கு ராசியா?). கதை ரெடி. கதாநாயகி அமைந்தால் அடுத்த மாதவே படப்பிடிப்புக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்