கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். மே 18 பில்லா கேன்ஸில் திரையிடப்படுகிறது. இந்த இரு பெருமைகளும் போதாதா நமக்கு?
விஷ்ணுவர்தன் ஏற்கனவே ஃபிரான்ஸ் பறந்துவிட்டார். ஏகனில் இருக்கும் அஜித் பதினெட்டாம் தேதி பில்லா திரையிடலின் போது அதில் கலந்துகொள்கிறார்.
தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் படங்களின் வியாபாரம் குறித்து அறிய கேன்ஸ் செல்கிறார். மோசர்பேரின் தமிழ்ப் பிரிவும் தனது டி.வி.டி.களை கேன்ஸில் கடைபரப்புகிறது.
ஃபிரான்ஸ் சென்றால் இந்த முறை நூறடிக்கு ஒரு தமிழ்ப் பிரபலத்தையாவது பார்க்கலாம்.
வரும் காலத்தில் ஆட்கள் அளவிற்கு படங்களும் பங்குபெற்றால்... வாவ், அது எத்தனை இனிய கனவு!