திங்கள், 12 மே 2008 (16:02 IST)
பெயர் சாமியே தவிர சிந்தனை முழுக்க ஆசாமி ரேஞ்சிலேயே இருக்கிறது. சாமி தனது முதல் படம் உயிரில் கதாநாயகி பாத்திரத்தை கொழுந்தன் மீது காமம் கொள்ளும் அண்ணியாக உருவாக்கினார்.
இரண்டாவது படம் மிருகம். நாயகி பத்மப்ரியாவை, தலையில் முண்டாசு கட்ட வைத்து, மண்வெட்டி பிடிக்க வைத்தார். போதாதற்கு மரம்வேறு ஏறினார் பத்மப்ரியா.
படங்களில் பெண்களை ஆண்களைப் போல சித்தரிப்பதே சாமிக்குப் பிடிக்கும் போல. அவரது புதிய படம் சரித்தரிம் சொல்லும் சேதியும் அப்படிதான் உள்ளது.
இதில் நாயகியாக நடிப்பதற்கு சிலம்பம் சுற்ற தெரிய வேண்டுமாம். அதற்காக அழகான சிலம்பம் சுழற்றும் பெண்ணாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சிலம்பு அணிந்த பெண்கள் கிடைப்பார்கள். சிலம்பும் சுற்றும் பெண்? ம்ஹூம்... இந்த முறை சாமிக்கு ஏமாற்றம் தான்!