வெள்ளி, 2 மே 2008 (19:02 IST)
'நீலகண்டா' கன்னடத்தில் வெளியான படம். இது தமிழில் 'பிரமாண்டம்' என்ற பெரியல் டப் செய்து வெளியாக உள்ளது.
ஜி.ஏ. இண்டர்நேஷனல் சார்பில் காயத்திரி தயாரிக்கும் இப்படத்தில் ரவிச்சந்திரன், நமீதா, ஸ்ரீதேவிகா, சீதா, சுஜாதா நடிக்கின்றனர். ஜே.பி.எம். வசனம் எழுத, ரவிச்சந்திரன் இசையமைக்க, சாய்பிரகாஷ் இயக்கத்தில் வெளிவரவுள்ளது பிரமாண்டம் திரைப்படம்.
திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், 'தூதர்' பதவிகளில் அங்கம் வகிக்கும் நமீதாவுக்கு பிரமாண்டத்தில் சிறப்பான கதாபாத்திரம் காத்திருக்கிறதாம்.
சர்வ அலங்கார சொர்ண தேவதையாக ஃபோட்டோ செஷனில் வெளிவந்துள்ள நமீதா ஸ்டில், நமீதா ரசிகர்களின் செல்ஃபோன்களில் ஸ்கீரின் சேவரில் பக்தியோடு பாதுகாக்கப்படுகிறதாம். நமீதா இருந்தால் பிரமாண்டத்திற்கு பஞ்சம் வருமான என்ன?