இயக்குநர் ஷங்கரை எங்கு கண்டாலும் தெய்வமே! தெய்வமே! என அன்பு செய்பவர் எழுத்தாளர் பாலகுமாரன்.
ஷங்கரின் ஜெண்டில்மேன், காதலன் படங்களுக்கு இவர்தான் வசனகர்த்தா என்றபோதும், ஷங்கரின் ரோபோவிற்கு கம்ப்யூட்டர் பற்றிய நுணுக்கங்கள் நிறைந்த படமென்பதால் "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்ற பாலாவைத் தவிர்த்து சுஜாதாவை நாடியிருந்தார் இயக்குனர்.
இந்நிலையில் சுஜாதா மறையவே பாலகுமாரனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷங்கர் குழுவின் தீவிர ஆலோசனைக்குப் பின்னும், ரஜினியின் அனுமதிக்குப் பின்னும்தான் பாலகுமாரன் வசனகர்த்தாவாக ரோபோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.