பின்னணி இசையில் புதிய பாணி!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (15:54 IST)
ஒரு படம் பூஜை போடப்படும்போது அன்று வெளிவரும் பேப்பர் மற்றும் போஸ்டர் விளம்பரத்தில் ஒரு இசையமைப்பாளரின் பெயர் இடம்பெறும்.

அதன்பின் படம் எடுக்கப்பட்டு முடிவு பெறும் தருவாயில் படத்தில் இயக்குனருக்கும், இசையமைப்பாளருக்கும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு பின்னணி இசை என்ற வேறு ஒரு இசையமைப்பாளரின் பெயர் பட டைட்டில் கார்டில் இடம்பெறும்.

'ஆட்டோகிர·ப்' சேரன் இயக்கிய படம். படம் மற்றும் பாடல்கள் வெற்றி பெற்றதோடு 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் எழுதிய கவிஞர் பா. விஜய்க்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. அப்படத்தின் இசை பரத்வாஜ். ஆனால் பின்னணி இசை சபேஷ்-முரளி பெயர் இடம்பெற்றது.

அதேபோல 'தமிழன்' பட இயக்குனர் மஜித். சமீபத்தில் எடுத்துவரும் 'கி.மு.' படத்தின் இசையமைப்பாளர் கலைவாணன். இவருக்கும், இயக்குனருக்கும் சின்ன பிரச்சனை ஏற்பட, பின்னணி இசையை சுபேஷ்-முரளி அமைக்கிறார். இதேபோல, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பல படங்களுக்கு பின்னணி இசையை (யுவனின் ஒப்புதலோடு) பிரேம்ஜி அமரன் கவனித்தார்.

இதற்கெல்லாம் முடிவுகட்டும் வகையில் வந்துள்ளது புதிய யுக்தி. வெளிநாட்டினர் தன் இசைக் குழு மூலம் வாசித்து இந்தியாவுக்கு அனுப்பிவரும் ரீ-ரெக்கார்டிங் சி.டி.களுக்கான உரிமையை லேகா ரத்தினகுமார் வாங்கியுள்ளார். ஒரு படத்தி‌ற்கான எல்லா இசையையும் இந்த சி.டி.களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

இதை புதிய டெக்னாலஜி என்று சந்தோஷப்படுவதை விட இன்னொரு இசையமைப்பாளருக்கு கிடைக்கும் பின்னணி இசை வாய்ப்பு பறிபோகிறது என்று நினைக்க வேதனையாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்