அறிக்கை நடிகைகள்!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (19:12 IST)
நடிக்கும் போது நடித்துவிட்டு பின் அதற்கொரு சமாதானம் சொல்வதே நடிகைகளுக்கு வழக்கமாகிவிட்டது.

'கலாபக் காதலன்' படத்தி¨ல் நடித்த அக்சயா. அக்கா புருஷனை விரும்பும் கேரக்டரில் நடித்தார். படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியதும் 'அக்காவின் கணவன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என் கேரக்டருக்கு ஆர்யா ஒரு ஆண் அவ்வளவுதான். அதனால் அப்படி காதலிக்கும் கேரக்டரில் நடித்தேன்' என்றார்.

அதேபோல், உயிர் படத்தில் சங்கீதா தன் கொழுந்தன் மீது ஆசை வைத்து தன் கணவனை கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு, 'இது நாட்டில் நடக்காத காரியமா? பல பணக்கார வீடுகளில் இன்றும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது' என்று அறிக்கை விட்டார்.

அதேபோல், 'அம்முவாகிய நான்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த பாரதி, 'என் கேரக்டர் பிடித்திருந்தது. என்னைப் பொறுத்தவரையில் அதுவும் ஒரு தொழில்தானே' என்றார்.

அந்த வரிசையில் 'அறை எண் 305ல் கடவுள்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த மதுமிதாவும் தற்போது காரணம் கற்பிக்கத் தொடங்கிவிட்டார். 'ஹீரோவை கடைசியில் திருத்துவதாக என் கேரக்டர் அமைந்தால் ஒப்புக்கொண்டேன்' என்று சொல்லி வருகிறார்.

பணம் பத்தும் செய்யும் என்பது போல், நடிக்க வந்துவிட்டால் எப்படியும் நடிக்கலாம் என்றாகிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்