'சிவமயம்' சூட்டிங் ஸ்பாட்!
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (19:34 IST)
'தூத்துக்குடி', 'ஈரமும் வீரமும்' ஆகிய படங்களை இயக்கியவர் சஞ்சய்ராம். தூத்துக்குடி படத்தில் 'கருவாப்பயா' பாடல் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு படத்தையும் சற்று கவனிக்க வைத்தது. ஆரம்பத்தில் மூலக்கரை பண்ணையார் என்று பெயர் சூட்டப்பட்டு, பின் 'ஈரமும் வீரமும்' என்ற பெயர் மாற்றத்துடன் 'பருத்தி வீரன்' சரவணனை வைத்து இயக்கினார்.
அடுத்து ஷாம்- ஸ்ரீதேவி (புதுமுகம்) நடிக்கும் 'சிவமயம்' இயக்கி வருகிறார் சஞ்சய் ராம். இதன் சண்டைக்காட்சி சென்னையில் ஜெமினி பில்டிங்கில் (பழைய ஜெமினி ஸ்டுடியோ) எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு காட்சியில் பத்துக்கும் மேற்பட்ட வில்லன்களை ஷாம் பந்தாடுகிறார்.
"இன்னும் மூன்று மாதங்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து திரை வரவிருக்கிறது 'சிவமயம்'. 'தூத்துக்குடி', 'ஈரமும் வீரமும்', 'இயக்கம்' ஆகிய படங்களைவிட மிகவும் சிறப்பான முறையில் இந்த 'சிவமயம்' எடுத்து வருகிறேன்.
அந்த மூன்று படங்களுக்கும் இல்லாத பொருட்செலவு, அதிகமான செட்டுகள், பலதரப்பட்ட படப்பிடிப்புத் தளங்கள் என மிகவும் நேர்த்தியாகச் செய்து வருகிறேன். 'சிவமயம்' படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இன்னொரு சஞ்சய் ராம் தெரியப் போகிறான்" என்றார் இயக்குநர்.