மெட்ராஸ் டாக்கீஸில் புஸ்கர்-காயத்ரி!

வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (16:47 IST)
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அவ்வப்போது வெளி இயக்குனர்களின் படங்களை தயாரிக்கும். அனேகமாக அவர்கள் மணிரத்னத்தின் மாணவர்களாக இருப்பார்கள். அழகம்பெருமாளின் டும் டும் டும். சுசி. கணேசனின் பைவ் ஸ்டார் சிறு உதாரணம். விதிவிலக்கு வஸந்த்.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தை புஷ்கர் - காயத்ரி இயக்குகின்றனர். இவர்களின் முதல் படம் ஓரம்போ ஓடவில்லையென்றாலும், மேக்கிங்கிற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. (மேக்கிங் ஸ்டைல் ஆங்கில 'நாச்' படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது வேறு விஷயம்)

புதிய படத்துகூகான கதை விவாதத்தில் இயக்குனர் தம்பதிகள் தற்போது பிஸி. நடிகர் நடிகைகள் தேர்வும் சத்தமில்லாமல் நடந்து வருகிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்