அன்பு தென்னரசுக்கு ஆனாலும் துணிச்சல் அதிகம். பட விழா ரத்தான பிறகும் அவரின் சத்தம் குறையவில்லை. ராமரை வைத்து தம் அடிப்பது போல், சிறுநீர் கழிப்பது போல் காட்சிகள் எடுத்தே தீருவோம் என்று சவால் விட்டிருக்கிறார்.
அழைப்பிதழிலும், போஸ்டரிலும் ராமரை அவமதித்ததாகக் கூறி, வணக்கம்மா பட விழாவை நிறுத்திய இந்து முன்னணியினர், ராமரை மீண்டும் இழிவுப்படுத்தினால் படப்பிடிப்பையே தடுப்போம் என எதிர் சவால் விட்டுள்ளனர்.
இப்படி இருதரப்பும் முண்டா தட்டி நிற்க இரண்டு வாரத்தில் வணக்கம்மா படத்தை தொடங்குகிறார் இயக்குனர் ஹரிராம். அழைப்பிதழில் ராமர் வேஷம் போட்டிருந்த நடிகர் சரவணன், தயாரிப்பாளருக்கு முழு ஒத்துழைப்பும் தருவதாகக் கூறியிருக்கிறார். இயக்குனர் சொல்படி நடிப்பதுதான் ஒரு நடிகரின் வேலை என்பது இவரது விளக்கம்.
எப்படியோ ஈ ஓட்டிக் கொண்டிருந்த இந்து முன்னணிக்கு இரும்பு கிடைத்திருக்கிறதுஐ. அடித்து வளைக்காமல் விடமாட்டார்கள்.