கம்போஸிங் என்றாலே வெளிநாட்டுக்கு கிளம்பி விடுகிறார்கள் இசையமைப்பாளர்கள். ஸ்ரீகாந்த் தேவா மட்டும் விதிவிலக்கு. சென்னை சாமியார்மடம் ஸ்டுடியோதான் அவருக்கு எல்லாம்.
நேபாளி படத்துக்காக அவரை பாங்காக் அழைத்துச் சென்றார்கள். அன்றிலிருந்து ஸ்டுடியோவுக்கு வெளியே கம்போஸிங் என்றால் குஷியாகிவிடுகிறார்.
கவிதாலயா தயாரிக்கும் கிருஷ்ணலீலை மினிமம் பட்ஜெட் படம் போல. வெளிநாடு போகாமல் ஊட்டிக்கு அழைத்துச் சென்று கம்போஸிங்கை முடித்திருக்கிறார்கள்.
இனி எந்தப் படம் என்றாலும் கம்போஸிங் வெளியூர்தான், முடிந்தால் வெளிநாடு என்று தீர்மானித்துள்ளாராம் தேனிசை தென்றலின் இளவல்.