இவரது கடிகாரம் மட்டும் ஒரு நாளைக்கு நாற்பத்தெட்டு மணி நேரம் ஓடுகிறதா? பூஜை போடும் நான்குப் படங்களில் இரண்டில் பிரகாஷ் ராஜ் இருக்கிறார்.
அஜித், ரம்பா நடித்த 'ராசி' படம் நினைவிருக்கிறதா? அதனை இயக்கிய ஜி. முரளி அப்பாஸ் சினிமாவே வேண்டாம் என்று சொந்த கிராமத்தில் செட்டிலானார். ஆனால், கலை ஆர்வம் அவரை விட்டுவைக்கவில்லை. இதோ மீண்டும் படம் இயக்குகிறார்.
சொல்ல சொல்ல இனிக்கும் என்ற அந்தப் படத்தை எம் ஸ்டுடியோ அப்துல்லா தயாரிக்கிறார். ஹீரோ நவ்தீப் என்றாலும் முக்கியமான கதாபாத்திரம் பிரகாஷ் ராஜுக்காம்.
இதைவிட ஹைலைட்டான விஷயம் படத்தில் நான்கு ஹீரோயின்கள். நவ்தீப் ஜாக்கிரதை!