செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (15:35 IST)
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவுடன் நடிக்கிறார் சினேகா. இதன் படப்பிடிப்பு முழுக்க அமெரிக்காவில் நடக்கிறது.
உள்ளூர் போல அமெரிக்காவில் ரீ-டேக் எடுத்து ஃபிலிமையும் முக்கியமாக நேரத்தையும் வீணாக்க முடியாது. திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்காவிடில் திண்டாட்டமாகிவிடும்.
அதனால் இங்கு ரிகர்சல் பார்த்த பிறகே அமெரிக்காவிற்குக் கிளம்புகிறார்கள். காட்சியை எடுப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் டயலாக் மனப்பாடம் செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் ரிகர்சலுக்குச் சம்மதித்த சினேகாவின் சின்சியாரிட்டி உண்மையிலேயே சிறப்பானதுதான்.
இயக்குநர் அச்சமில்லாமல் படப்பிடிப்பை நடத்தலாம்!