நாயகன் கூட்டணி ஒன்றிணைகிறது. கோலிவுட், பாலிவுட்டில் இதுவே ஹாட் டாபிக்.
மணிரத்னம் நகரம் சார்ந்த காதல் கதையை இயக்குகிறார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் விக்ரம் நடிப்பதாக சொல்லப்பட்டது. குருவில் மாதவன் நடித்தாரே, அந்த மாதிரி!
இப்போது விக்ரம் அதில் நடிக்கவில்லையாம். அவருக்கு பதில் கமல் நடிக்கிறாராம். மணிரத்னம் இதுகுறித்து கமலிடம் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறுதி செய்யப்படாத இந்த தகவல், உண்மையாகும் என்கிறார்கள், கமல், மணிரத்னத்துக்கு நெருக்கமானவர்கள்.