ரஜினி ஜோடியாக ரோபோவில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போவதில்லை என நாளுக்கொரு செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன வடமாநில ஊடகங்கள். அதனை தனது பேட்டி மூலம் தவிடுபொடியாக்கியிருக்கிறார் திருமதி அபிஷேக் பச்சன்.
ரஜினிகாந்துடன் ஷங்கரின் ரோபோவில் நீங்கள் நடிக்கிறீர்கள்?
இது முழுக்க ரஜினி - ஷங்கர் ஸ்டைல் பொழுதுபோக்குப் படம். ரஜினிகாந்துடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துக்கு மேல், இதில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு வேறு காரணங்கள் இல்லை. ஷங்கரும் ரஜினி சாரும் பல படங்களுக்காக என்னை அணுகியிருக்கிறார்கள். இது எனக்கு ஒரு வகையான குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஜீன்ஸ் படத்திலிருந்தே தன்னுடைய எல்லாப் படங்களிலும் (பாய்ஸ் நீங்கலாக) நடிக்க ஷங்கர் என்னை அணுகியிருக்கிறார்.
இதுதான் நீங்கள் ரோபோவில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணமா?
இந்த முறை ரோபோவுக்காக கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டேன். ஷங்கர், ரஜினி சார் இருவருடனும் பணியாற்ற வேண்டும், அவ்வளவுதான்!