மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் நடித்துக் கொண்டிருக்கும் படம் தமிழ் தேசம். மலரினும் மெல்லிய படத்தில் நடித்த வர்ஷினி என்ற ஆதிரா நாயகி. படத்தை தமிழ் செல்வா என்பவர் இயக்குகிறார்.
தமிழ்த் திரையுலகம் உண்ணாவிரதம் இருந்த நாளில் அவுட்டோரில் மாட்டிக்கொண்டது தமிழ்தேசம் யூனிட். தேசிய பக்தியை தெரிவிக்க சேப்பாக்கம்தான் வரவேண்டுமா? படப்பிடிப்பு நடந்த இன்ஜினியரிங் கல்லூரிக்கு வெளியே அதிரடியாக உண்ணாவிரதம் இருந்தது தமிழ் தேசம் யூனிட்.
இதைக்கண்ட லோக்கல் அரசியல்வாதிகளும் உற்சாகத்துடன் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள, போராட்டம் களை கட்டியிருக்கிறது.
படத்திலும் இதுபோன்ற அதிரடி சமாச்சாரங்கள் ரீல் நிறைய இருக்கிறதாம்!