திகிலில் திரையரங்குகள்!
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:06 IST)
எப்போது தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் எந்தப் பிரச்சனை வந்தாலும் முதலில் கர்நாடக அமைப்பினால் தாக்கப்படுவது தமிழ்ப்படங்கள் ஓடும் திரையரங்குகள்தான். இந்த முறை ஒகேனக்கல் கூ.ட்டுக்குடி நீர் திட்டப் பிரச்சனையிலும் அதே காட்சி அரங்கேறியுள்ளது.
சங்கீத், நட்ராஜ் உட்பட ஒன்பது திரையரங்குகள் சூறையாடப்பட்டுள்ளன. பேனர்கள் கிழிப்பு, கல் வீச்சு, கண்ணாடி, நாற்காலிகள் உடைப்பு என ருத்ரதாண்டவம் ஆகியுள்ளது 'கர்நாடக ரக் ஷன வேதிகே' அமைப்பு. குடிநீர் திட்டம் ரத்தாகும் வரை தமிழ்ப்படங்களை ஓடவிட மாட்டோம் என்ற மிரட்டல் வேறு.
கோடிக்கணக்கில் முதலீடு செய்து (விஜய் நடிக்கும் குருவி படத்தின் கர்நாடக வினியோக உரிமை ஒன்றரை கோடி) என்ன ஆகுமோ என்ற நிலையில் கர்நாடக வினியோகஸ்தர்களும், எந்த நேரத்தில் திரையரங்கம் தாக்கப்படுமோ என்ற பீதியில் உரிமையாளர்களும் திகிலில் இருப்பதுதான் இப்போதைய நிலைமை.