அப்படி இப்படியென்று ஒருவழியாய் ஏப்ரல் 25 தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழா என்பது முடிவாகிவிட்டது. நேரு உள்விளையாட்டரங்கு இதற்காக முழு வீச்சில் தன்னை புதுப்பித்துக்கொள்ள தயாராகிவிட்டது.
ஆஸ்கர் விருது வழங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 'கோடாக்' அரங்கம் போன்ற செட், முதல்வல் கலைஞரின் தலைமை, ஜாக்கிசான் சிறப்பு விருந்தினராக வருகை, கோலிவுட், பாலிவுட் பிரபல நட்சத்திரங்களின் பங்களிப்பு என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கமல் செய்த பத்து வேடங்களின் செப்படி வித்தைகளையும் ரசிர்களின் விருந்தாக்கப் போகிறார்களாம்.
தனது படங்களில் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள கே.எஸ். ரவிக்குமார், ஒரு பாடலுக்கு கமலுடன் ஆடி அசத்துகிறார் என்பது போனஸ் தகவல்.