ஹாலிவுட் படங்களை சுட்டு தமிழில் படம் பண்ணிவிட்டு, சொந்தக் கதைபோல் பந்தா செய்பவர்களுக்கு மத்தியில் வெங்கட்பிரபு ரொம்பவே வித்தியாசம். இவரது 'சரோஜா' 24 மணி நேரங்களில் நடக்கும் சம்பந்தமில்லா சம்பவங்களின் கதை.
'பேபல்' என்ற பெயரில் பிராட்பிட் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் 'சரோஜா'வை எடுப்பதாக, மற்றவர்கள் கண்டுபிடித்துக் கூறும் முன்பே உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார் வெங்கட்பிரபு.
எஸ்.பி.பி. சரண், சிவா, பிரேம்ஜி, வைபங், வேகா, காஜல் அகர்வால், நிகிதா ஆகியோர் நடிக்கிறார்கள். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் இதுவரை 47 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டுமாம்.