இயக்குனர்கள் நடிகர்களாவது தொடர்கதையாகி வருகிறது. சேரன், எஸ்.ஜே. சூர்யா, அமீர், சுந்தர் சி சோலோ நாயகர்களாகிவிட்டனர். சமுத்திரக்கனி, ரவிமரியா, அழகம் பெருமாள், சீமான் பார்ட் டைம் நடிகர்களாகிவிட்டனர். இந்தப் பட்டியலின் புதுவரவு ஏ. வெங்கடேஷ்.
அடிதடி படங்களை எடுத்துவரும் ஏ. வெங்கடேஷ் வசந்தபாலனின் அங்காடித்தெருவில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வருகிறார்.
வசந்தபாலனின் அழைப்பின் பேரில் அங்காடித்தெருவில் நடிக்கிறேனே தவிர, இயக்கம்தான் எனது குறிக்கோள் என்றார் ஏ. வெங்கடேஷ்.
நடிப்பு என்பது பூதம். அது யாரை விழுங்கும் என்பது விழுங்குவதற்கு முதல் விநாடி தெரியாது. ஏ. வெங்கடேஷ் எப்படி என பொறுத்திருந்து பார்ப்போம்!