அமீர் பாவம், தமிழராக பிறந்துவிட்டார். பக்கத்து மாநிலம் ஏதாவதில் பிறந்திருந்தால் அவர் வாங்கிய விருதுக்கு கொண்டாடியிருப்பார்கள்.
அமீர் பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான சிறப்பு விருது வாங்கி வாரம் பல ஆகிறது. இன்னமும் கோடம்பாக்கம் கொட்டாவி விட்டபடி விழித்தபாடில்லை.
அதேநேரம் பருத்தி வீரனுக்கு பாராட்டு விழா நடத்த சினிமா பிரஸ் கிளப் தீர்மானித்திருக்கிறது. அமீரின் ராம் சைப்ரஸ் பட விழாவில் விருது வென்றபோதும் பூரித்துப்போய் பாராட்டு விழா நடத்தியதும் சினிமா பிரஸ் கிளப்தான்!
வரும் திங்கள் மாலை ஃபிலிம் சேம்பரில் இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது. அமீர் கலந்துகொள்கிறார். திரையுலகமே திரளாக சேர்ந்து நடத்த வேண்டிய விழா. பத்திரிக்கையாளர்களாவது நடத்துகிறார்களே, அந்த அளவுக்கு அமீர் அதிர்ஷ்டக்காரர்தான்!