அரசாங்கம் விஜயகாந்தின் 150வது படம். தவிர விஜயகாந்த் ஒரு ஹிட் கொடுத்து பல காலம் ஆகிறது. இது அவருக்கு பெரும் குறை. பழைய தோல்விகளை அடித்துச் செல்லும் மெகா ஹிட்டாக அரசாங்கம் அமைய வேண்டும் என்பது அவரது ஆசை. அதற்காக சில திட்டங்கள் வைத்துள்ளார்.
வரும் 28 ஆம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். சென்னையில் ஒரேயொரு இடத்தில் ஆடியோவை வெளியிடாமல், ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒரே நேரத்தில் நடத்த விரும்புகிறார் விஜயகாந்த். அவரது கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் இந்த விழா ஏற்பாட்டை கவனித்துக் கொள்வார்கள்.
கட்சியினர் பார்த்தாலே படம் நூறு நாள் ஓடிவிடும் என்று யாரோ சொன்னதன் விளைவுதான் இந்த புது ஐடியாவாம்!