செல்வராகவன் இயக்கத்தில் த்ரிஷா நடித்தப் படம் ஆடவாரி மாட்லகு அர்த்தாலே வேருலே. படம் ஆந்திராவில் பம்பர் ஹிட்! ஆந்திராவில் மெல்ல சரிந்து கொண்டிருந்த த்ரிஷாவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய இப்படம், த்ரிஷாவுக்கு விருதையும் பெற்றுத் தந்துள்ளது!
தெலுங்கின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று மா. வருடா வருடம் இத்தொலைக்காட்சி சார்பாக தெலுங்கு திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற வருடத்தின் சிறந்த நடிகைக்கான மா விருதுக்கு த்ரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆடவாரி... படத்தில் சிறப்பாக நடித்தற்காக அவருக்கு இந்த சிறப்பு கிடைத்துள்ளது.