நடிகர்கள் பட்டம் வைத்துக்கொள்வதை வெள்ளித்திரையில் விமர்சித்திருந்தார் இயக்குனர் விஜி. வார்த்தை விஜியுடையது என்றாலும் பேசி நடித்தது பிரகாஷ் ராஜ் என்பதால், பிரஸ்மீட்டில் அவரிடமே இதுகுறித்து கேட்கப்பட்டது.
சினிமாவுக்கு வந்து நாலு படம் நடிக்கும் முன்பே சின்ன தளபதி, புரட்சி தளபதின்னு பெயர் வைக்கிறதைத்தான் விமர்சித்திருந்தோம். மற்றபடி அனுபவனமுள்ள நடிகர்கள் பட்டம் வைப்பது பற்றி எதுவும் சொல்லலை என விளக்கமளித்தார் பிரகாஷ் ராஜ்.
அவரது விளக்கத்தால் பரத், விஷால் போன்றவர்கள் உள்ளுக்குள் பொசுங்கினாலும், பெரிய நடிகர்களுக்கு நிம்மதி. நம் தலையில் கை வைக்கவில்லையே!
இதுகுறித்து சரத்குமாரிடம் கேட்டதற்கு, பிரகாஷ் ராஜ் கூறியது அவரது சொந்தக் கருத்து. இதுபற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை என்று நழுவிக் கொண்டார். இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் எந்த நடிவடிக்கையும் எடுக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.