கோடம்பாக்கத்தில் கதைக்குதான் பஞ்சமே தவிர, காஸிப்களுக்கு தட்டுப்பாடே இல்லை. புதிய வதந்தி, யோகியில் நடிக்கும் அமீர், ஜெயம் ரவி நடிப்பதாக இருந்த கண்ணபிரானை கைவிடுகிறார்!
விக்ரமிடம் அமீர் கதை கூறியிருக்கிறார். கதை விக்ரமுக்கு பிடித்திருக்கிறது. எனது இயக்கத்தில் வெளிவரும் ஸ்டைலிஷான படமாக இது இருக்கும் என அமீர் படம் பற்றி கூறியிருக்கிறார்.
யோகி முடிந்ததும் ஜெயம் ரவியை வைத்து கண்ணபிரான் படத்தை தொடங்குவதாக இருந்தார் அமீர். இப்போது சின்ன மாற்றம். விக்ரம் படம் முடிந்த பிறகு கண்ணபிரானை இயக்குகிறாராம்.
விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முழுக்க ஹாங்காங்கில் நடைபெறவுள்ளது.