சாமிக்கு இப்போது சனி திசை. தட்டுகிற எந்தக் கதவும் திறக்கவில்லை. கதை ரெடி, கதாநாயகன் ரெடி, படத்தை தயாரிக்க தயாரிப்பாளரும் தயார்! என்ன இருந்தென்ன, நந்தி மாதிரி பத்மப்ரியா விவகாரம் இருக்கிறதே.
'மிருகம்' படப்பிடிப்பில் பத்மப்ரியாவுக்கு பளார் கொடுத்ததால் ஒரு வருடம் படம் இயக்க சாமிக்கு தடை விதித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். தடை முடியும் வரை படம் பற்றி யோசிக்கவே முடியாது. இது ஒருபுறமிருக்க, தனது புதிய படத்துக்கு அய்யனார் என பெயர் வைக்க விரும்பினார். அங்கும் சிக்கல். அய்யனார் பெயரை வேறு யாரோ சேம்பரில் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்போது அய்யனாருக்கு மாற்றாக நல்ல பெயர் தேடிக் கொண்டிருக்கிறார்.