அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கண்டிப்பாக வெளிவரும் என்று சொல்லப்பட்ட தசாவதாரம் இசை, மாத இறுதிக்குத் தள்ளிப் போகிறது.
தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடந்த திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். ஜாக்சி சானை விழாவிற்கு அழைக்கும் வேலை முடிந்த நிலையில், காரணம் சொல்லப்படாமல் மேலும் சில வாரங்கள் இசை வெளியீடு தள்ளிப் போகிறது.
ஜாக்சி சானின் தேதி கிடைக்கவில்லை என சிலரும், படத்தின் வாய்ஸ் மிக்சிங் வேலைகள் முடியவில்லை என வேறு சிலரும் காரணம் கூறுகின்றனர். விழா நடக்கும் இடமும் நேரு உள் விளையாட்டு அரங்கிலிருந்து ஏற்கனவே ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.