பசி இருக்கு, பாத்திரம் நிறைய உணவு இருக்கு. ஆனால் சாப்பிட முடியாது என்றால் எப்படியிருக்கும்? ஏறக்குறைய மிருகம் இயக்குனர் சாமியின் நிலையும் இதுதான்.
பத்மப்ரியாவின் கன்னத்தில் அறைந்ததால் ஒரு வருடம் படம் இயக்க சாமிக்கு தடை விதித்தது தயாரிப்பாளர்கள் சங்கம். ஒரு வருடம் முடிய இன்னும் பல மாதங்கள் இருக்கிறது.
இடைப்பட்ட காலத்தில் அடுத்தப் படத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டாமர் சாமி. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். ஒருவர் ராஜ்கிரண். இன்னொருவர் மிருகத்தில் நடித்த ஆதி.
படத்தை தயாரிக்க தயாரிப்பாளரும் தயார். குறுக்கே நிற்பது சங்கம் விதித்த தடை. தடையை தளர்த்துங்கள், படம் இயக்க அனுமதியுங்கள் என சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டு வருகிறார் சாமி. சாமிக்கு கிடைக்குமா விமோசனம்?