ஒளிப்பதிவாளர் கே.வி. குகன் இயக்குனராகும் படம் இனிது இனிது. பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் படத்தை தயாரிக்கிறது.
தெலுங்கில் வெற்றி பெற்ற ஹாப்பி டேய்ஸ் படத்தின் ரீ-மேக்தான் கே.வி. குகனின் படம். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். தெலுங்கு படத்தில் தமன்னா நடித்த வேடத்திற்கும் புதுமுகம் ஒருவரையே தேர்வு செய்துள்ளனர்.
ரீ-மேக் என்றாலும், தமிழுக்குப் பொருந்திவர வேண்டும் என்பதற்காக கதை விவாதம் நடந்து வருகிறது. சென்னை பரபரப்பு மிகுந்த நகரமாகிவிட்டதால் கதை விவாதத்தை கோயம்புத்தூரில் நடத்துகிறார்கள்.
படத்தை இயக்குவதுடன் கே.வி. குகனே ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் போட்டோ செஷன் நடைபெற உள்ளது.