சிபி கடைசியாக நடித்தப் படம் லீ. அதுவே இறுதிப் படமாக இருக்குமோ என நினைத்த நேரம், சிலிர்த்துக் கொண்டு மீண்டும் சீனுக்கு வந்திருக்கிறார்.
விஸ்வாஸ் சுந்தர் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா அசிஸ்டெண்ட் இயக்கும் படத்தில் சிபி ஹீரோ. ஹீரோயின் காம்னா. பட அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் வேறொரு படமும் சிபியைத் தேடி வந்துள்ளது.
அறிமுக இயக்குனர் குணா இயக்குகிறார். சிபிக்கு ஜோடி லக்சனா. படத்துக்கு 'சிவசிவ' என பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.