நானூறு துணை நடிகர்கள், முன்னூறு கிராமியக் கலைஞர்கள், மொத்தமாக இவர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய சாதனை. ஒன்று சேர்த்ததுடன் ஒரு பாடலையும் எடுத்திருக்கிறார் இளவேனில், உளியின் ஓசை படத்தின் இயக்குனர்.
கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க ராஜராஜசோழன் வருவது போலவும், அவரை சோழ குடிகள் பாடல் இசைத்து வரவேற்பது போலவும் காட்சி. நானூறு துணை நடிகர்களுடன் மதுரை பக்கமிருந்து முன்னூறு கிராமியக் கலைஞர்களையும் சென்னை ஃபிலிம் சிட்டியில் இதற்காக ஒன்றிணைத்திருக்கிறார்கள். கலா மாஸ்டர் நடனம் அமைக்க, பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய பாடலை படமாக்கினார் இளவேனில்.
பாடலின் தொகையறாவை முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார். இசை இளையராஜா. ராஜராஜனாக சரத்பாபுவும், அவரது மகன் ராஜேந்திர சோழனாக உதயாவும் நடித்தனர்.