சினிமாவுக்கு கவிஞர் அறிவுமதி பாடல் எழுதுவதில்லை. இந்த முடிவை அவர் எடுத்து பலகாலம் ஆகிறது. ஆனாலும், அவருக்கும், சினிமாவுக்குமான உறவு அவரது மகன் மூலமாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவை வைத்துப் படம் இயக்க முயன்று வருகிறார். படத்துக்குப் பெயர் புதிய வார்ப்புகள். ஏற்கனவே பாக்யராஜ் பயன்படுத்திய பெயர்தான்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் அறிவுமதியின் மகன் ராசாமதி. ஒளிப்பதிவாளராக புதிய வார்ப்புகள் இவருக்கு முதல் படம்.
அப்பா வார்த்தைகளில் கவிதை எழுதினார். மகன் கேமராவில் எழுதப் போகிறார். சினிமா மீது அப்பாவுக்கு கோபம். மகனுக்காவது காதல் இருக்கிறதா பார்ப்போம்!