பொல்லாதவன் வெற்றியடைந்த பிறகு தனுஷுக்கு ரஜினி படப்பெயர் மீது தனி மோகம். அவரை வைத்து இயக்குகிறவர்களும் இந்த மோகத்துக்கு தூபம் போடுகிறார்கள்.
குரூப் கம்பெனி கதிரேசன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்க இருப்பது விஜயா வாஹினி புரொடக்ஷனுக்கு. இயக்குனர் தலைநரம் சுராஜ். மணிசர்மா இசையமைக்கிறார்.
படத்தின் கதைக்கு ரஜினி, சிவாஜி இணைந்து நடித்த படிக்காதவன் படத்தின் பெயர் பொருத்தமாக இருக்கிறதாம். ரஜினி படப்பெயரை வைப்பதே தனுஷுக்கு அதிர்ஷ்டம் என்பது ஏற்கனவே நிரூபணமான நிலையில், படிக்காதவனை தாண்டி வேறொரு பெயரை இயக்குனரால் யோசிக்க முடியவில்லையாம்.