தனது ஹோசிமின் தாடியை மழித்து மபொசி மீசையுடன் அடையாளம் தெரியாதபடி மாறியிருக்கிறார் மிஷ்கின். கதாநாயகர்களுக்கான கதைகளை ஒதுக்கி வைத்து தனது கனவு படமான நந்தலாலாவை இயக்கும் வேலையில் மிஷ்கின் பிஸி.
நந்தலாலா கதை ஒரு சிறுவனைப் பற்றியது. முக்கிய வேடமொன்றில் ஸ்னிக்தா நடிக்கிறார். மிஷ்கினும் படத்தில் தோன்றலாம் என்றொரு செய்தியும் உலவுகிறது.
முதல் முறையாக மிஷ்கினுடன் இளையராஜா நந்தலாலாவுக்காக இணைகிறார். இளையராஜாவின் தீவிர ரசிகர் மிஷ்கின். அவரை தனது படத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது மிஷ்கினின் நீண்டநாள் கனவு.
விஷால் அடுத்த வருடம் மிஷ்கின் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அவ்வளவு நாள் விட்டத்தைப் பார்த்து உட்கார்த்திருக்க முடியாது என்பதால், நந்தலாலாவை இயக்குவதில் தீவிரம் காட்டுகிறார். ஃபோட்டோ செஷனோடு ஏற்கனவே ஒருமுறை நந்தலாலா கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.