மிருகம் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஆதி. இவர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.
அறை எண் 305-ல் கடவுள் படத்துக்குப் பிறகு மூன்று படங்களை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ஒரு படத்தை ஷங்கரின் உதவியாளர் அறிவழகன் இயக்குகிறார்.
பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஆதி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் சிந்துமேனன். கடல்பூக்கள் படத்துக்குப் பிறகு காணாமல் போன சிந்துமேனனை தெலுங்கிலிருந்து தனது படத்துக்காக அழைத்து வந்திருக்கிறார் அறிவழகன்.