பா. விஜய் நாயகனாகும் படம் தாய் காவியம். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய நாவல். அதனை தமிழில் தனக்கேயுரிய நடையில் எழுதினார் முதல்வர் கருணாநிதி.
இப்படி இரண்டு பேர் எபதிய கதையை திரைப்படமாக்குவதில் நிறைய சிக்கல்கள். சீனா சென்று இரண்டு பாடல்களை படமாக்கிவிட்டு வந்த பின்னும் திரைக்கதையின் குழப்பங்கள் தீரவில்லை.
இதனால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி மீண்டும் கதை விவாதத்தை தொடங்கியுள்ளனர். மகாபலிபுரத்தில் தாய் காவியத்தின் கதை விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது.
படத்தை எடுத்தபின் தவறை சரி செய்ய முடியாது என்பதால், இப்போதே சரி செய்யும் வேலையை தொடங்கியுள்ளனர். படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே யோசித்திருக்க வேண்டிய விஷம். தாமதமாகவாவது யோசித்ததால் தயாரிப்பாளர் தப்பித்தார்!