நீண்ட நாட்களாக இசையமைக்காத கார்த்திக் ராஜா, மீண்டும் வெளிச்சத்தில்! இந்த முறை இவர் இசையமைப்பது ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு.
பொய் படத்துக்கு வசனம் எழுதிய பாலசந்தரின் உதவியாளர் தாமிரா, எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரட்டைச் சுழி படத்தை இயக்குகிறார். குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
புதிய பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டிவரும் தாமிரா படப்பிடிப்பை மே மாதம் தொடங்குகிறார்.