படப்பிடிப்பில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு லட்சம் மதிப்புள்ள உடைகள் எரிந்து நாசமாயின.
ஷாஜிகைலாஷ் இயக்கும் எல்லாம் அவன் செயல் படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடந்து வருகிறது. ஆர்.கே., பாமா நடிக்கும் இந்தப் படத்தின் பாடல் காட்சியை ஷாஜிகைலாஷ் படமாக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று படப்பிடிப்புக்காக வைத்திருந்த உடைகள் தீப்பற்றி எரிந்தன.
மழையில் நடிகர்கள் நனைந்தபடி ஆடும் பாடல் காட்சி என்பதால், செயற்கை மழையை உருவாக்க தண்ணீர் நிரப்பிய லாரிகள் படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதனால், தீ பரவாமல் உடனடியாக அணைக்கப்பட்டது. இருந்தும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானதாக தயாரிப்பாளர் துரை தெரிவித்தார்.
படப்பிடிப்பு நடந்த அரங்குக்கு வெளியே வெல்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி, படப்பிடிப்புக்காக வைத்திருந்த உடைகளில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.