திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்த பத்து சினிமாவுக்கு சமமானது, பெங்களூரு கண்டக்டர் சிவாஜி ராவ், இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான வரலாறு!
இந்த சுவாரஸ்யமான வரலாறை டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் புத்தகமாக எழுதியுள்ளார். ரஜினியின் நண்பரும், சக கலைஞருமான கமல்ஹாசன், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியுள்ளனர். ரஜினியை சந்தித்து தனது புத்தகத்தைக் கொடுத்து அவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் 6 ஆம் தேதி சென்னை கன்னிமரா ஹோட்டலில் மாலை 7 மணிக்கு நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது. தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் டி.ஆர். கார்த்திகேயன், ரஜினியின் நண்பரும் பத்திரிக்கையாளருமான சோ உள்ளிட்டோர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார்கள். சீ·ப் கெஸ்ட், ரஜினியின் 2வது மகள் செளந்தர்யா.
இந்தப் புத்தகம் விரைவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.